உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு பஸ்சுடன் சிகிச்சைக்கு வந்த டிரைவர்

திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு பஸ்சுடன் சிகிச்சைக்கு வந்த டிரைவர்

திருப்புத்துார் : அரசு பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு பஸ்சுடன் சிகிச்சைக்கு வந்தார்.தஞ்சாவூர் கபிஸ்தலத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் சிவக்குமார் 43. இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் டிரைவராக உள்ளார். நேற்று காலை இவர் தஞ்சாவூர் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து மதுரைக்கு செல்ல அரசு பஸ்சை ஓட்டி வந்தார். திருப்புத்துாரில் காலை 11:30 மணிக்கு மதுரைக்கு புறப்பட்ட போது திடீரென சிவக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வழியில் இருந்த திருப்புத்துார் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அரசு பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து கண்டக்டர் மற்றும் பயணிகள் உதவியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ்சில் மதுரைக்கு அனுப்பப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை