உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. திருப்பணிக்குழுத் தலைவர் ராம.அருணகிரி தலைமை வகித்தார். சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அழகம்மை ஆறுமுகம் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். பிடாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். கோயில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ