உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாண்டுரங்கன் கோயிலில் நாளை ஆஷாட ஏகாதசி 

பாண்டுரங்கன் கோயிலில் நாளை ஆஷாட ஏகாதசி 

சிவகங்கை : சிவகங்கை ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் இரண்டு நாட்கள் ஆஷாட ஏகாதசி விழா நடைபெற உள்ளது.சிவகங்கை பெருமாள் கோயில் தெருவில் உள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் இன்று மாலை 5:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டுமே ரகுமாயி சமேத பாண்டுரங்கனின் உற்ஸவ மூர்த்தி திருவடிகளை தொட்டு வணங்கும்நிகழ்வு நடைபெறும். அதை தொடர்ந்து பஜனை நடக்கும். நாளை (ஜூலை 17) காலை 8:00 மணிக்கு ரகுமாயி பாண்டுரங்கனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, அர்ச்சனை நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ