| ADDED : மே 01, 2024 07:52 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஜப்பான் ஆர்க்வேர் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மியோவாக்கி முறையில் மரம் நடும் விழா நடந்தது. கிளை தலைவர் தனுஷ் ஸ்டாலின் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மோகன்ராஜன், கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் பிரபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி மியோவாக்கி முறை பற்றி பேசினார். ஜப்பான் ஆர்க்வோர் தொழில்நுட்ப நிறுவன நிறுவனர் பிரபு மரக்கன்றுகளை வழங்கி அவற்றை பராமரிப்பதற்கான நிதியுதவி அளித்தார். ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் இளவரசு, விரிவுரையாளர் சேவற்கொடியோன் மரக்கன்றுகளை நட்டனர். ஆசிரியர் கற்பகவல்லி, காளையார்கோவில் கிளைச்செயலாளர் அலெக்சாண்டர் துரை, செயற்குழு உறுப்பினர் விநாயகமூர்த்தி, கிளை நுாலகர் வசந்த செல்வி பேசினர். கிளை பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.