உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை பஸ் ஸ்டாண்ட்டை ஆக்கிரமிக்கும் டூவீலர்களால் அவதி

மானாமதுரை பஸ் ஸ்டாண்ட்டை ஆக்கிரமிக்கும் டூவீலர்களால் அவதி

மானாமதுரை : மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிற்கும் பிளாட்பாரங்களில் டூவீலர்களை நிறுத்துவதால் பஸ் ஏறி,இறங்க முடியாமல் பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி, சென்னை, காரைக்குடி, திருப்புத்தூர், புதுக்கோட்டை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட ஏராளமான ஊர்களுக்கு 400க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்ற நிலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மானாமதுரை பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிற்கும் பிளாட்பாரங்களில் ஏராளமானோர் டூவீலர்களை நிறுத்தி வைப்பதினால் பயணிகள் பஸ் ஏறி, இறங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து பயணிகள் கூறியதாவது: மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் பிளாட்பாரங்களில் பஸ்களை நிறுத்தும் இடத்தில் டூவிலர்களை நிறுத்தி வைப்பதினால் பஸ்கள் பிளாட்பாரத்திற்கு வெளியே நிற்கின்றன.உயரமான படிகளில் ஏறமுடியாமல் கர்ப்பிணிகள், முதியவர்கள் சிரமம் அடைகின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை