உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி கல்லுாரி சாலையில் பயனில்லாத கண்காணிப்பு கேமரா

காரைக்குடி கல்லுாரி சாலையில் பயனில்லாத கண்காணிப்பு கேமரா

காரைக்குடி: காரைக்குடி கல்லுாரிச் சாலையில் பயன்பாடு இல்லாமல் கவிழ்ந்து கிடக்கும் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.காரைக்குடியில் அழகப்பா பல்கலை பள்ளிகள், கல்லுாரிகள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். கல்லூரி சாலையில் போலீசார் மற்றும் பல்கலை கல்லூரி சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த சாலையில் குற்றங்களை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.பல இடங்களில் வைக்கப்பட்ட கேமராக்கள் கண்காணிக்க முடியாத நிலையில் கம்பியில் தொங்குகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி