மேலும் செய்திகள்
வீட்டுக்குள் புகுந்த பாம்பு
22-Feb-2025
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நாளை வெறி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.இப்பகுதியில் திரியும் நாய்கள் வெறி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டுமாடுகள், கோயில் மாடுகளை கடித்து வருகின்றன. இதனால் நோய் தாக்கி 14க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சிங்கம்புணரி சீரணி அரங்கில் நாளை (மார்ச் 10) காலை 8:30 மணி - 12:30 மணி வரை வெறி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரித்துறை மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி இணைந்து நடத்தும் இம்முகாமில் பொதுமக்கள் தங்களது அனைத்து செல்லப்பிராணி மற்றும் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சிங்கம்புணரி கால்நடை உதவி மருத்துவர் ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
22-Feb-2025