உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை

சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. யாகம் நடத்தப்பட்டு பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார்.பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கு உமாபதி சிவாச்சாரியார் தேய்பிறை அஷ்டமி பூஜையை நடத்தி வைத்தார். மணப்பட்டி நாய்க்குட்டியான் கோயிலில் பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் பங்கேற்றனர்.* திருப்புத்துார் திருத்தளிநாதர்கோயிலில் அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவருக்கு தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று காலை 11:00 மணிக்கு யோகபைரவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் துவங்கின. பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சர்யார்கள் பூஜைகளை நடத்தினர். மூலவருக்கு அபிேஷகம் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் யோக பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ