உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரதமரை கார்த்தி சந்திக்காதது ஏன்

பிரதமரை கார்த்தி சந்திக்காதது ஏன்

பா.ஜ., தேவநாதன் கேள்விதிருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கோட்டையிருப்பில் சிவகங்கை தொகுதி பா.ஜ.,கூட்டணி வேட்பாளர் தேவநாதன் பிரசாரம் செய்தார்அவர் பேசியதாவது:யார் உங்களுக்கு நல்லது செய்வார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.நாங்கள் தீவிரவாதத்தை அழித்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி கொண்டு வந்துள்ளோம். ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளோம். எங்கு போனாலும் குடிநீர் பிரச்னை உள்ளது. இங்கிருந்த எம்.பி.,என்ன செய்தார். அவருக்கு இந்தத் திட்டம் குறித்து தெரியுமா என்பது தெரியவில்லை. சிவகங்கை தொகுதி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதன் வளர்ச்சிக்காக பிரதமரை சந்தித்தாரா. ஏன் சிவகங்கை தொகுதியில் 3 தமிழக அமைச்சர்கள் உள்ளனர். ஒரு அமைச்சரையாவது மக்கள் கோரிக்கைகளுக்காக இந்த எம்பி., சந்தித்தாரா. அவர்களை நீங்கள் மதிக்க மாட்டீர்கள். தமிழக முதல்வரையாவது நீங்கள் மக்களுக்காக சந்தித்தீர்களா. ஆனால் நான் சந்திப்பேன். என் கருத்தும், கொள்கையும் முதல்வருக்கு மாறானது. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து மக்கள் பிரச்னைகளுக்காக நான் சந்திப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை