உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிளஸ் 2 அரசு தேர்வில் 15,107 மாணவர் பங்கேற்பு  குலுக்கல் முறையில் கண்காணிப்பாளர் தேர்வு 

பிளஸ் 2 அரசு தேர்வில் 15,107 மாணவர் பங்கேற்பு  குலுக்கல் முறையில் கண்காணிப்பாளர் தேர்வு 

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் மார்ச் 1 ல் துவங்கும் பிளஸ் 2 பொது தேர்வினை 163 பள்ளிகளை சேர்ந்த 6,800 மாணவர், 8,307 மாணவிகள் என 15,107 பேர் எழுத உள்ளனர்.பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு மார்ச் 1 ல் துவங்கி மார்ச் 22 வரை நடைபெற உள்ளது. இதில் இம்மாவட்டத்தை சேர்ந்த அரசு, ஆதிதிராவிடர் நலம், மெட்ரிக்., உதவி பெறும் பள்ளிகள் என 163 பள்ளிகளை சேர்ந்த 6,800 மாணவர், 8,307 மாணவிகள் என 15 ஆயிரத்து 107 மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளனர்.

பிளஸ் 1 தேர்வில் 16,513 பேர்

பிளஸ் 1 மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு மார்ச் 4 ம் தேதி துவங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை 161 பள்ளிகளை சேர்ந்த 7,543 மாணவர், 8,970 மாணவிகள் என 16 ஆயிரத்து 513 பேர் எழுத உள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் 17,978 பேர்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் 26 முதல் ஏப்., 8 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை மாவட்ட அளவில் உள்ள 278 பள்ளிகளை சேர்ந்த 8,853 மாணவர் 9,125 மாணவிகள் என 17 ஆயிரத்து 978 பேர் எழுதுகின்றனர்.

குலுக்கல் முறையில் ஆசிரியர் தேர்வு

பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து தேவகோட்டை, திருப்புத்துார், சிவகங்கையில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் குலுக்கல் முறையில் தேர்வு அறை கண்காணிப்பாளருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டது. பணி செய்யும் ஆசிரியர்களுக்கு அதே ஒன்றியத்தில் தேர்வு அறை ஒதுக்காமல், மாற்று ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்வதற்காக குலுக்கல் முறையில் ஆசிரியர்களே தேர்ந்து எடுத்து கொள்வார்கள்.இந்த முறையால் அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். சிவகங்கையில் நேற்று நடந்த குலுக்கல் முறையில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக் பள்ளிகள்) விஜய சரவணக்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்