மேலும் செய்திகள்
விபத்தில் தொழிலாளி பலி
29-Jan-2025
சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம், சிலைநீர்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், 40. இவர் நேற்று அதிகாலை, 12:00 மணிக்கு சதுர்வேதமங்கலத்தில் இருந்து ஊருக்கு டூ-வீலரில் சென்றார். பின்னால், சதுர்வேத மங்கலத்தைச் சேர்ந்த மணி, 30, அமர்ந்திருந்தார். அப்போது காரைக்குடியில் இருந்து பழனி சென்ற அரசு பஸ், டூ-வீலர் மீது மோதியதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மணி சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தார். விபத்தில் பைக் தீப்பற்றி எரிந்தது. சதுர்வேதமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Jan-2025