உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

காரைக்குடி: சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத பி.டி.ஓ., மீது புகார்களை கவுன்சிலர்கள் கூறினர்.சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் சரண்யா தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 4 கூட்டங்களில் பி.டி.ஓ., ஊர்க்காவலன் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்வதாக கவுன்சிலர்கள் புகார் கூறினர். மேலும், கூட்டத்தில் மின் வாரியம், பொதுப்பணித்துறை, வேளாண் துறை உட்பட பல அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை என்ற புகார் எழுந்தது.1வது வார்டு கவுன்சிலர் ராமச்சந்திரன்; வடகுடி ஊராட்சி மணச்சையில் ரேஷன் கட்டடம் சேதமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.6வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம்; பி.டி.ஓ., க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டால் தான் கவுன்சிலர்கள் தங்களது குறைகளை கூற முடியும். கடந்த 4 கூட்டங்களில் பி.டி.ஓ., ஊர்க்காவலன் கலந்து கொள்ளவில்லை. மக்கள் பிரச்னை குறித்து சிந்திப்பதில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை