இளைஞர் கொலையில் மேலும் ஒருவர் கைது
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்த நிலையில் நேற்று மேலும் ஒருவரை கைது செய்தனர். சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் ராஜேஷ் 19. இவர் நவ.1 இரவு 10:15 மணிக்கு சென்னை செல்ல சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நின்றார். அவரை டூவீலரில் வந்த 8 பேர் வாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில் நேற்று மேலும் ஒருவரான முல்லை நகர் கண்ணாயிரம் மகன் கிேஷாரை 18 கைது செய்தனர்.