முஸ்லிம் மகளிர் உதவும்சங்கம் துவக்க விண்ணப்பம்
சிவகங்கை: மாவட்ட அளவில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜூலை 23 க்குள் வழங்க வேண்டும்.இம்மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவக்க அதற்குரிய சங்கத்தை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சங்கத்தில் கலெக்டர் தலைவராகவும், துணை தலைவராக மகளிர் திட்ட இயக்குனர், பொருளாளராக மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், 2 உறுப்பினர்களை கவுரவ செயலாளர்களாக கொண்டு சங்கத்தை பதிவு செய்ய வேண்டும். புதிதாக துவக்கப்படும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்கப்படும். உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் நேரில் சென்று பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூலை 23 க்குள் அதே அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.