உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார பயணம்

மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார பயணம்

சிவகங்கை : மத்திய அரசு மூலம் தமிழக மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து சிவகங்கையில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.மத்திய அரசின் பழங்குடியினருக்கான உரிமை, உஜ்வாலா திட்டம் மூலம் பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர், இலவச வீடு திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், உணவு பாதுகாப்பு உத்தரவாதம், பிரதமரின் கிசான் திட்டம் உட்பட ஏராளமான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன பயணம் சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சிகளில் 20 இடங்களில் மேற்கொண்டனர். கடந்த 2 மாதங்களாக நடந்த பிரசார பயணத்தின் நிறைவு விழா சிவகங்கை வாரச்சந்தை அருகே நடைபெற்றது.முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் தலைமை வகித்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன், பாண்டியன் கிராம வங்கிஆலோசகர் பிச்சைமணி, சிவகங்கை தலைமை தபால் நிலைய அலுவலர் தவம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா துணை மேலாளர் ராசாத்தி பங்கேற்றனர். வங்கி, தபால் ஊழியர்கள், பொதுமக்கள் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த, தன்னம்பிக்கை நாடாக மாற்றுவோம். பாரம்பரியத்தை கொண்டாடுவோம். ஒற்றுமையை வலுப்படுத்தி நாட்டை பாதுகாப்பவர்களை மதிப்போம். குடிமகனின் கடமைகளை செய்வோம் என உறுதி மொழி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி