உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பீஹார் போல தமிழகத்தில் கூட்டணி தர்மத்தை பா.ஜ., கடைபிடிக்கும்: சொல்கிறார் அண்ணாமலை

 பீஹார் போல தமிழகத்தில் கூட்டணி தர்மத்தை பா.ஜ., கடைபிடிக்கும்: சொல்கிறார் அண்ணாமலை

திருப்புத்தூர்: ''பீஹார் மாநிலத்தை போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி தர்மத்தை பா.ஜ., கடைபிடிக்கும்,'' என, சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வந்தார். முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் கொடுத்தார்கள். மீதமுள்ள பணத்தை விரைவில் வழங்கவுள்ளனர். தேர்தலுக்கு பின் அதுபோன்ற திட்டங்களை நிதிஷ்குமார் தலைமையிலான அரசு நிறைவேற்றப்போகிறது. அதே போல் காங்.,கும் நாங்கள் வெற்றிபெற்றால் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் வரை கொடுக்கப்போவதாக தெரிவித்தார்கள். இதை காங்., மாநில தலைவருக்கு கட்சி தலைமை சொல்லவில்லையா. பீஹார் மக்கள் இரு தரப்பினர் சொன்னதையும் கேட்டார்கள். ஜனநாயகத்தை பொறுத்தவரை மக்கள் தான் வாய்ப்பை தேர்வு செய்தார்கள். கடந்த 25 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் மீது நம்பிக்கை வைத்து மறுபடியும் ஆட்சி பொறுப்பை அளித்தார்கள். பீஹாரில் காங்.,க்கு வரலாறு காணாத தோல்வி கிடைத்துள்ளது. அம்மாநிலத்தில் காங்.,க்கு 5 தொகுதி தான் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 2026 தேர்தலில் காங்.,க்கு அதேதோல்வி தான் கிடைக்கும். இந்த வயிற்றெரிச்சல் காரணமாக தான் காங்., மாநில தலைவர் அப்படி பேசுகிறார். பீஹார் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செல்வாக்கு, நல்ல அரசு வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தான் காரணம். குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்களின் நிலை தான் காங்., இருக்கும் கூட்டணியை தோற்கடிக்கவேண்டும் என்ற எண்ணம் வரக்காரணம். இதேநிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும். பீஹாரில் 2020 தேர்தலில் எங்களை விட குறைந்த எம்.எல்.ஏ.,க்களை பெற்ற நிதிஷ்குமாரை முதல்வராக்கினோம். 2025லும் அவரை முதல்வர் ஆக்கியுள்ளோம். காரணம் கூட்டணி தர்மம். காங்., கட்சி எங்காவது தங்களை விட குறைவாக சீட் உள்ள கட் சிக்கு முதல்வர் பதவி வழங்கியுள்ளதா. காங்., எப்படி ஜனநாயகம் குறித்து பேச முடியும். பீஹார் போல தமிழகத்திலும் கூட்டணி தர்மத்தை பா.ஜ., கடைபிடிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி