உள்ளூர் செய்திகள்

 ரத்ததான முகாம்

சிவகங்கை: சிவகங்கையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. சிவகங்கை நேருபஜார் ஆர்.சி., நடுநிலை பள்ளியில் நடந்த முகாமை சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார். த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட தலைவர் துல்கர்ணை சேட், மாவட்ட செயலாளர் இம்ரான்கான், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப், மனித நேய மக்கள் கட்சி நகர் நிர்வாகிகள் சவுக்கத் அலி, சித்திக் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர்கள் ரத்த சேகரிப்பில்ஈடுபட்டனர். ரத்ததானம் செய்தோறுக்கு சான்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி