உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் கண்ணாடி உடைப்பு: போலீசார் விசாரணை

பஸ் கண்ணாடி உடைப்பு: போலீசார் விசாரணை

திருப்புவனம் : திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் தனியார் பஸ் கண்ணாடியை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் பைபாஸ் ரோடு வழியாக சென்று விடும், பயணிகள் பேருந்து உள்ளிட்டவை மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பைபாஸ் ரோடு வழியாக திருப்புவனம் நகருக்குள் வந்து செல்கிறது. பைபாஸ் ரோடு பகுதியில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அந்த வழியாக டூவீலர்களில் செல்பவர்களை மறித்து நகை, பணம், அலைபேசியை கொள்ளையடிப்பது ஏதும் கிடைக்காவிட்டால் பஸ்கள் மீது கல்வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 9:40 மணிக்கு மதுரை சென்ற தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சிலர் கல்வீசி தாக்கி விட்டு ஓடிவிட்டனர். திருப்புவனம் போலீசார் டிரைவர் சமயதுரை புகார்படி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை