கலவரம் ஏற்படுத்தும் வீடியோ 4 யு டியூபர் கள் மீது வழக்கு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இளமனுாரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையை மையப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வீடியோ, சமூக வலைதள பதிவுகளை பதிவிட்ட 4 யு டியூபர்கள் மீது வழக்கு பதிந்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். காளையார்கோவில் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் மரியஜெய ராஜேஷ். இவர் இளமனுாரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையை மையப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், ஜாதி ரீதியாக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலும், அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும் உண்மைக்கு புறம்பான தகவல், போலியான செய்திகளை வீடியோ, சமூகவலைதளங்களில் பதிவிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதனையடுத்து 4 யு டியூபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.