உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை: அச்சத்தில் விற்பனையாளர், மக்கள்

இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை: அச்சத்தில் விற்பனையாளர், மக்கள்

காரைக்குடி அருகேயுள்ள நெசவாளர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, 250க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இங்கு பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கு நிரந்தர கட்டடம் இல்லாத நிலையில் மகளிர் சுய உதவி குழு கட்டடத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை செயல்படுகிறது. இந்த மகளிர் சுய உதவி குழு கட்டடமும் பல ஆண்டுகளாக முற்றிலும் சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. சேதம் அடைந்த கட்டடத்தால் ரேஷன் பொருட்கள்வாங்க வரும் மக்கள் அச்சத்துடனே வந்து செல்ல வேண்டி உள்ளது. விற்பனையாளரும் அச்சத்திலேயே அமர வேண்டி உள்ளது. இப்பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை. விபத்து ஏற்படும் முன், இப்பகுதியில் நிரந்தர புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை