உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வாக்காளரிடம் சென்று சேராத சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பம் அதிகாரிகளை கடிந்த கலெக்டர் 

 வாக்காளரிடம் சென்று சேராத சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பம் அதிகாரிகளை கடிந்த கலெக்டர் 

சிவகங்கை: சிவகங்கையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி மனுவை முழுமையாக சேர்க்கவில்லை என நகராட்சிக்கு வந்த கலெக்டர் பொற்கொடி அதிகாரிகளை கடிந்து கொண்டார். சிவகங்கை கலெக்டர் நேற்று நகராட்சி அலுவலகம் வந்தார். அப்போது கமிஷனர் உட்பட அதிகாரிகள் யாரும் இல்லை. இதில் கடுப்பான கலெக்டர், அவர்களை கடிந்து கொண்டார். அங்கிருந்த சில அலுவலர்களிடம், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி மனு சிவகங்கையில் பெரும் பாலான வீடுகளுக்கு சென்று சேர வில்லை என புகார் வருகிறது. நகராட்சியில் கமிஷனர் முதல் வருவாய் அலுவலர்கள் வரை என்ன செய்கிறீர்கள். இந்த வாரத்திற்குள் 80 சதவீதத்திற்கு மேல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த மனுவை வழங்கியாக வேண்டும். மேலும், நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடிந்து கொண்டார். இந்த நிலையில் நாய்கள் பிரச்னைக்கு தீர்வு காணாத சிவ கங்கை நகராட்சி கமிஷனர் அசோக்குமார், கால்நடை துறை இணை இயக்கு னர் ஆகியோர் 3 தினங் களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென கலெக்டர் நோட்டீஸ் அளித்தார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது: நாய்களை பிடிக்க வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி மனுவை வழங்க வேண்டும் என பணிச்சுமை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வாரத்திற்குள் 80 சதவீத மனு வாக்காளர்களுக்கு வழங்கிவிட வேண்டும் என தெரிவித்துவிட்டார். மேலும் இந்த பணிக்கென தனியாக ஊழியர்களை நியமித்து விரைந்து பணி செய்ய வேண்டும் எனக் கூறினார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி