உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விற்பனைக்கு வந்த கலர் கோலப்பொடி

 விற்பனைக்கு வந்த கலர் கோலப்பொடி

காரைக்குடி: மார்கழியில் வீட்டு வாசலை கோலங்களால் அலங்கரிக்க கலர் கோலப்பொடி விற்பனை காரைக்குடி பகுதியில் தொடங்கியுள்ளது. மார்கழி முதல் 30 நாட்களுக்கும் பெண்கள் வீட்டு வாசலில் கலர் கோலமிட்டு, பூசணி பூக்களை வைத்து அலங்கரித்து வருவர். இதற்காக கலர் கோலப்பொடிகள் விற்பனையும் துவங்கிவிட்டது. காரைக்குடியில் 200 கிராம் கோலப்பொடி ரூ.20 முதல் 30 வரை விற்கப்படுகிறது. இங்கு 10 க்கும் மேற்பட்ட கலர்களில் கோலப்பொடி விற்பனைக்கு வந்துள்ளது. பெண்கள் ஆர்வமுடன் கோலப்பொடிகளை வாங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை