உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்தூர் : திருப்புத்துார் அருகே சுண்ணாம்பிருப்பில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் 24 ஜோடிகள் பங்கேற்றன.சுண்ணாம்பிருப்பு அருகே மதுரை ரோட்டில் இரு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய, சிறிய மாடுகள் பிரிவாக போட்டி நடத்தினர்.பன்னீர்செல்வம் அணி கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், மாவட்ட செயலாளர் அசோகன் துவக்கி வைத்தனர். மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்றன.பெரிய மாட்டிற்கு 9, சிறிய மாட்டிற்கு 8 கி.மீ., துாரம் பந்தய துாரமாக நிர்ணயித்திருந்தனர்.இதில் வெற்றி பெற்ற காளை உரிமையாளருக்கும், சாரதிக்கும் பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன.எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் கண்ணன் ஏற்பாட்டைசெய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை