மேலும் செய்திகள்
பூக்கடைகாரர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது
29-Dec-2024
சிவகங்கை : சிவகங்கை தாகியார் நகரை சேர்ந்தவர் அசல்ராஜ் மகன் ராஜ்குமார் 45. இவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு சிவகங்கை நேரு பஜாரில் உள்ள தனியார் பாருக்கு சென்றார்.அங்கு அவருக்கும் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாரிமுத்துக்கும் 24 பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை ராஜ்குமார் தனது உறவினர் ராஜீவ் 30 என்பவருக்கு போன் செய்து மாரிமுத்து தன்னை தாக்க வருவதாக கூறியுள்ளார். அங்கு வந்த ராஜீவ் மாரிமுத்துவை சமரசம் செய்து ராஜ்குமாரை அழைத்து சென்றுள்ளார். இருவரும் அண்ணாமலை நகர் பகுதியில் டூவீலரில் சென்ற போது அவர்கள் சென்ற டூவீலரை வழிமறித்த மாரிமுத்து தான் வைத்திருந்த அரிவாளால் ராஜ்குமார் தலையில் வெட்டியுள்ளார்.இதை தடுத்த ராஜீவிற்கும் கையில் வெட்டு விழுந்துள்ளது. இருவரையும் வெட்டிவிட்டு மாரிமுத்து தப்பியுள்ளார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
29-Dec-2024