உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் ரோட்டில் தேங்கும் மழை நீரால் பாதிப்பு

மானாமதுரையில் ரோட்டில் தேங்கும் மழை நீரால் பாதிப்பு

மானாமதுரை : மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் ஆங்காங்கே மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோடு மிகவும் குறுகலாக இருந்ததை தொடர்ந்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக கடந்த மாதம் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மானாமதுரை அண்ணாதுரை சிலையிலிருந்து சிவகங்கை பைபாஸ் ரோடு வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. மானாமதுரையில் பெய்த மழைக்கு ரோட்டில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரோடு அகலப்படுத்தப்பட்ட நிலையில் மழை நீர் செல்ல வழி ஏற்படுத்தவில்லை. பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை