உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சரணாலயத்தில் குறைந்து வரும் மரங்கள்

சரணாலயத்தில் குறைந்து வரும் மரங்கள்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி ஒன்றியத்தில் கொள்ளுக்குடிபட்டி கண்மாயில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து கூடுகட்டி குஞ்சு பொரித்து திரும்பி செல்வது வழக்கம். சில ஆண்டுகளாக குறிப்பிட்ட அளவு பறவைகள் கண்மாயில் நிரந்தரமாக தங்கி இரைதேடி வருகின்றன. தற்போது கொள்ளுக்குடிபட்டி கண்மாய் துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. கரைகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. கண்மாயில் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த அளவைவிட தற்போது மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பறவைகள் கூடு கட்டும் பகுதி அடர்த்தி இன்றி காணப்படுகிறது. துார்வாரப்பட்ட இடத்தில் வனத்துறையினர் கூடுதல் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை