உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் செயல்படாத விருந்தினர் மாளிகை

சிங்கம்புணரியில் செயல்படாத விருந்தினர் மாளிகை

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கோயில் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை செயல்படாமல் பூட்டி கிடப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.இங்குள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலையொட்டி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் அரசியல் பிரமுகர்கள், வி.ஐ.பி.,கள் இங்கு நாள் வாடகை அடிப்படையில் தங்கிச்செல்ல அனுமதிக்கப்படுவர். சில மாதங்களாக இந்த விருந்தினர் மாளிகை பூட்டியே கிடக்கிறது. இதனால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் வி.ஐ.பி.,கள் சிரமப்படுகின்றனர். கட்டடத்தை பழுதுபார்க்க பூட்டுவதாக கூறி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்த பணியும் மேற்கொள்ளவும் இல்லை பயன்பாட்டுக்கு திறந்து விடவும் இல்லை. எனவே விரைந்து பழுது பார்ப்பு பணிகளை முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை