தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் பணி மந்தம்
தேவகோட்டை: தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது.இங்கிருந்து 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப் படுகிறது பஸ் ஸ்டாண்டிற்கு ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றனர். இட நெருக்கடியில் பயணிகள் தவித்ததால் பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கிய தினசரி மார்க்கெட் இடத்தையும் சேர்த்து பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகராட்சியினர் முடிவு செய்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிக்கு தமிழக அரசு ரூ.12.81 கோடி நிதி ஒதுக்கியது. அதற்கான பூமி பூஜை ஜூன் 11ம் தேதி நடந்தது. துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார். பூமி பூஜை நடந்து 5 மாதம் கடந்த நிலையில் பணியானது மிகவும் மந்தமாக நடை பெறுவதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். சேதமடைந்துள்ள கட் டடங்களை அப்புறப் படுத்திவிட்டு புதிய கட் டடங்கள் கட்டும் பணி இன்னும் துவங்கவில்லை. தீபாவளிக்கு பிறகு பணி மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. பணியை விரைந்து முடித்து பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.