உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் திருப்புவனம் மக்கள் அதிருப்தி

சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் திருப்புவனம் மக்கள் அதிருப்தி

திருப்புவனம்: திருப்புவனத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் சிலர் தரமற்ற குடிநீர் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்புவனம் பேரூராட்சி சார்பில் புதுார் மற்றும் கோட்டை பகுதி வைகை ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.குடிநீர் விநியோகம் குறித்த நேரம் முறையாக இல்லாததால் பொதுமக்கள் பலரும் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டர் மற்றும் வாட்டர் கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.இவர்களை குறிவைத்து சிலர் தரமற்ற குடிநீர் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்: குடிநீர் கேன் வாங்கினால் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை வரும். புதிய வாட்டர் கேனில் வாங்கினால் கூட கேன் அடியில் பாசி பிடித்து பச்சை நிறத்தில் தண்ணீர் மாறுகிறது. சுவையும் மினரல் வாட்டர் மாதிரி இல்லை.வேறு வேறு நிறுவனத்தில் வாங்கினாலும் அதே போல் தான் உள்ளது. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மினரல் வாட்டர் நிறுவனங்களை ஆய்வு செய்து பொதுமக்கள் அச்சத்தை போக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ