| ADDED : நவ 19, 2025 07:00 AM
காரைக்குடி: காரைக்குடியில் தே.மு.தி.க.,பொதுச் செயலாளர் பிரேமலதா கலந்து கொள்ளும் உள்ளம் தேடி இல்லம் நாடி பிரசார ரத யாத்திரை நாளை நடக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள்,பிரமுகர்கள் பிரசார பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தே.மு.தி.க.,சார்பில், ''உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் பிரசாரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வருகிறது. நாளை மாலை காரைக்குடியில், ''உள்ளம் தேடி இல்லம் நாடி'' பிரசாரம் நடைபெறுகிறது. காரைக்குடி பெரியார் சிலையில் இருந்து, ஐந்து விளக்கு வரை விஜயகாந்த் ரத யாத்திரை நடைபெறுகிறது. இதில் தே.மு.தி.க.,பொதுச் செயலாளர் பிரேமலதா,பொருளாளர் சுதீஷ் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து ஐந்து விளக்கில் பிரேமலதா பேசுகிறார். அதனைத் தொடர்ந்து மானாமதுரையில் இரவு 7:00 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் திருவேங்கடம் செய்து வருகிறார்.