உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் 

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை; பார்லிமென்டில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து சிவகங்கையில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு நகர் செயலாளர் துரை ஆனந்த் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் ராமநாதன், அயூப்கான் பங்கேற்றனர். காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் குணசேகரன், மாநகராட்சி மேயர் முத்துத்துரை, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் செந்தில், மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.திருப்புத்துாரில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல்,மானாமதுரையில் நகர் செயலாளர் பொன்னுச்சாமி,எம்.எல்.ஏ., தமிழரசி, இளையான்குடியில் ஒன்றிய செயலாளர் மதியரசன்,திருப்புவனத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், தேவகோட்டையில் நகர் செயலாளர் பாலமுருகன், காளையார்கோவிலில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, நாட்டரசன்கோட்டை பேரூர் செயலாளர் ஜெயராமன்,சிங்கம்புணரியில் ஒன்றிய செயலாளர்கள் பூமணி, பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ