நாடக மேடை திறப்பு விழா
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள கொம்படிமதுரை கிராமத்தில் ரூ.7.5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நாடக மேடையை எம்.எல்.ஏ.,தமிழரசி திறந்து வைத்தார்.முன்னாள் எம்.எல்.ஏ.,மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் தமிழரசன், நிர்வாகிகள் காளிமுத்து கண்ணன், பெரியசாமி,சிவநேசன், சத்யேந்திரன்,கருப்பையா,நாகராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.