வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காளையப்பா நகர் பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாக்கடை கால்வாய் பணிகளை முடித்து, போடப்படாமல் இருக்கும் ரோட்டினை விரைவில் அமைத்து சரி செய்ய வேண்டும்....
காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சியில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரை சிலர் மின் மோட்டார் மூலம் எடுப்பதால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.காரைக்குடியில் உள்ள 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சம்பை ஊற்றுப் பகுதியில் 13 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. தவிர நகரின் பல பகுதிகளிலும் 24 போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.காலை மற்றும் மாலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் செக்காலை, செக்காலை தெற்கு 3வது வீதி, இன்கம்டேக்ஸ், சுப்பிரமணியபுரம், சூடாமணிபுரம், கணேசபுரம், கழனிவாசல், பர்மா காலனி உட்பட நகரின் பல பகுதிகளில் சில வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர். குடிநீர் கிடைக்காமல் பணம் கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். மாநகராட்சி கமிஷனர் சித்ரா கூறுகையில்: இதுகுறித்து வந்த புகாரின் பேரில் ஆய்வு செய்து மின் மோட்டார் களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காளையப்பா நகர் பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாக்கடை கால்வாய் பணிகளை முடித்து, போடப்படாமல் இருக்கும் ரோட்டினை விரைவில் அமைத்து சரி செய்ய வேண்டும்....