உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  துளிர் திறனறிதல் தேர்வு

 துளிர் திறனறிதல் தேர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த துளிர் திறனறிதல் தேர்வில் 2,130 மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவில் துளிர் திறனறிதல் தேர்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் இத்தேர்வு நடந்தது. மாவட்ட அளவில் 2,130 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினர். இத்தேர்வில் அறிவியல் சிந்தனை, மனப்பான்மை, பொது அறிவு சார்ந்த வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளித்தனர். இத்தேர்வினை நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள் எழுதினர். மாவட்ட அளவில் 100 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அளவில் சிறந்த மாணவர்கள், மாநில அளவில் அறிவியல் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, மாவட்ட பொருளாளர் பிரிவு, கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம், கிளை தலைவர் மணவாளன், மாவட்ட துணை தலைவர் ஆரோக்கியமேரி தேர்வினை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை