உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்விதான் ஒரு சமூகத்தை உயர்த்தும் பார்க்கவ குல சங்க மாநில புரவலர் பேச்சு

கல்விதான் ஒரு சமூகத்தை உயர்த்தும் பார்க்கவ குல சங்க மாநில புரவலர் பேச்சு

சிவகங்கை: கல்விதான் ஒரு சமூகத்தை உயர்த்தும் என காளையார்கோவிலில் நடந்த தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் மதுரை மண்டல மாநாட்டில் மாநில புரவலர் வெங்கடாச்சலம் பேசினார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரி அரங்கில் தமிழ்நாடு பார்க்கவ குல சங்க மதுரை மண்டல மாநாடு நடந்தது. மண்டல தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாநிலப் புரவலர் வெங்கடாசலம் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில இளைஞர் அணி தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாநில தலைவர் பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாநில பொருளாளர் பத்மநாபன், மாவட்ட தலைவர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கும் விருது, ஊக்கத்தொகை வழங்கி, மாநில புரவலர் வெங்கடாசலம் பேசியதாவது, வாழ்வில் முன்னேற கல்வியும், விவசாயமும் மிகவும் முக்கியமான ஒன்று. கல்விதான் ஒரு சமூகத்தை உயர்த்தும். நம் குழந்தைகள் நன்றாக படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அதேபோல் விவசாயத்தில் இந்த பகுதி மக்கள் அதிகமாக ஈடுபடு கிறார்கள். விவசாயம்தான் நமது அடிப்படையை உயர்த்தும். இரு கை தட்டினால் ஓசை வரும். அதேபோல் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும், என்றார். கூட்டத்தில் வட்ட தலைவர் இருதயராஜ், விஜய் டிரேடர்ஸ் மனோகரன், வட்ட இணை செயலாளர் ஆனந்தராஜ், ஆரோக்கியசாமி, எஸ்.ஆர்., ரூபிங் மெட்டல்ஸ் ஆரோக்கியசாமி, சமையல் கலை வல்லுநர் பாலு, காளையார்கோவில் ஜெயபால், அசோக்ராஜ் நிறுவனம் ஆரோக்கியம், ஜெ.ஜெ.,மெகா சூப்பர் மார்க்கெட் ஜான் பாஸ்கர், வட்ட பொருளாளர் முருகானந்தம், லிவி குரூப்ஸ் லிவிராஜா, எஸ்.எம்., பவர்ஸ் மோசஸ், காளையார்கோவில் வேதராஜ், இன்பென்ட் ஜீசஸ் நர்சிங் கல்லுாரி ராஜூ, சூசைராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை