உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கச்சாத்தநல்லுாரில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் முதியவர் பலி

கச்சாத்தநல்லுாரில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் முதியவர் பலி

இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள கச்சாத்த நல்லுாரில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் முதியவர் வேலுச்சாமி இறந்தார். கடந்த ஆண்டு பெரும்பச்சேரி பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவன் ஒருவர் பரிதாபமாக பலியானார். நேற்று மாலை 5:00 மணிக்கு இளையான்குடி அருகே கச்சாத்த நல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி 65, என்ற முதியவர் தனது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தின் மீது மரம் சாய்ந்ததில் மின்கம்பம் உடைந்து முதியவர் மீது விழுந்ததில் அவர் இறந்தார். மாவட்ட நிர்வாகம் இளையான்குடியில் மோசமான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி