உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் கவலை

திருப்புத்துார் பெரிய கண்மாயிலிருந்து பிரியும் பாசனக்கால்வாய்கள் திருப்புத்துார் நகருக்குள் சென்று நீர்நிலைகளுக்கு நீர்வரத்தை ஏற்படுத்துகிறது. நீர்நிலை நிரம்புவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்கும்.முன்பு நகரில் பல இடங்களில் விவசாய நிலம் இருந்ததால் இந்த பாசனக்கால்வாய்களில் துாய்மையான நீர் சென்றது. கால்வாய்களும் முழுமையாக இருந்தது. விவசாயமும் செழித்தது.பின்னர் பெரியகண்மாய்க்கு நீர்வரத்து பாதித்து, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கண்மாய் பெருகியதால் இந்த பாசனக் கால்வாய்களில் நீர் வரத்து குறைந்து விவசாயம் பாதித்ததுடன், விளை நிலங்களும் வீட்டு மனைகளாக மாறியது.தற்போது விளை நிலங்கள் புதிய குடியிருப்பு பகுதிகளாக மாறி வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. பல பாசனக்கால்வாய்கள் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு மறைந்து விட்டது.எஞ்சியுள்ள கால்வாய்களில் கழிவுநீர் தான் செல்கிறது.கண்மாயில் நீர் பெருகினால் நீர் வெளியேற கால்வாய் பராமரிப்பில்லாமல் உள்ளதால் குளங்களுக்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடிநீர் மட்டம் குறைந்து வருகிறது.பெரும்பாலான குளங்களில் நீர் வற்றி விட்டதால் கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. எதிர்காலத்தில் இது கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் பாசனக் கால்வாய்களை புனரமைக்கவும், கழிவுநீர் கலக்காத வண்ணம் பாதுகாக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.பேரூராட்சியினர் கூறுகையில், பாசனக் கால்வாய்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீதளிக்குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. அடுத்து அட்டக்குளத்திற்கு நீர்வரத்துக் கால்வாய் புனரமைக்கப்படும். அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் குளத்திற்கு செல்லாமல் வெளியே கொண்டு செல்லப்படும். படிப்படியாக கால்வாய்கள் புனரமைக்கப்படும். கழிவு நீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி செலவில் ' கழிவு நீர் கசடு அகற்ற' திட்டம் இடம் தேர்வு செய்த பின் நிறைவேற்றப்படும்' என்றார்.பொதுப்பணித் துறையினர் கூறுகையில், திருப்புத்துார் பெரியகண்மாயிலிருந்து தென்மாப்பட்டு கண்மாய்க்கு செல்லும் பாசனக்கால்வாய் நகரினுள் செல்கிறது.அதில் கழிவுநீர் வடியாமல் தடுக்கவும், கால்வாயை இரு புறமும் கான்கிரீட் சுவர் மூலம் புனரமைக்க ரூ 4.95 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அனுமதியானவுடன் பணிகள் துவக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி