உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல் கொள்முதல் மையத்தில் கூடுதல் கட்டணம் வசூல் விவசாயிகள் புகார்

நெல் கொள்முதல் மையத்தில் கூடுதல் கட்டணம் வசூல் விவசாயிகள் புகார்

மானாமதுரை: மானாமதுரை அருகே குலையனுாரில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தில் கூடுதலாக பணம் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.மானாமதுரை ஒன்றியத்துக்குட்பட்ட சூரக்குளம் குரூப் குலையனுாரில் அரசின் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூடை ஒன்றுக்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.10க்கு மேல் கூடுதலாக பணம் வசூல் செய்யப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.குலையனூரைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில், கொள்முதல் நிலையத்தில் ஒரு மூடைக்கு ரூ.10க்கு மேல் அதிகமாக ஆட்களுக்கு தகுந்த படி பணம் வசூல் செய்து வருகின்றனர்.இது குறித்து புகார் தெரிவித்தால் மிரட்டுகின்றனர். மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து நுகர் பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு நிர்ணயித்த ரூ.10ஐ விட கூடுதலாக வசூல் செய்வது சம்பந்தமாக கூலித் தொழிலாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை