உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  இடைக்காட்டூரில் கடைசி மாத முதல் வெள்ளி வழிபாடு

 இடைக்காட்டூரில் கடைசி மாத முதல் வெள்ளி வழிபாடு

மானாமதுரை: இடைக்காட்டூர் சர்ச்சில் இந்த வருடத்தின் கடைசி மாத முதல் வெள்ளி வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு திருப்பலியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த வருடத்திற்கான கடைசி மாத முதல் வெள்ளிக்கிழமை வழிபாட்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு பரமக்குடி மறை மாவட்ட அதிபர் இருதயராஜ், திருத்தல அதிபர் ஜான் வசந்த குமார் தலைமை தாங்கினர். தொடர்ந்து பாதிரியார்கள் அந்தோணி மிக்கேல், சிங்கராயர், குமார் ராஜா, கிறிஸ்துராஜ் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், பாதிரியார் பிரின்ஸ், இடைக்காட்டூர் பங்கு இறை மக்கள் திருத்தல நண்பர்கள், அருட் சகோதரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை