உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காரைக்குடியில் தொடர் மழை பத்தக்கட்டை அமைத்து மீன் பிடிப்பு

 காரைக்குடியில் தொடர் மழை பத்தக்கட்டை அமைத்து மீன் பிடிப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே பெய்த தொடர் மழை காரணமாக பத்தக்கட்டை அமைத்து மக்கள் மீன் பிடிப்பில் ஈடுபட்டனர். காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கண்மாய், குளங்கள் உட்பட நீர்நிலைகள் நிரம்பி, மறுகால் பாய்கிறது. மழைக்காலங்களில் கண்மாய் மற்றும் ஆறு குளங்களில் கிடைக்கும் மீன்களுக்கு தனி ருசி என்பதால் காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும், பாரம்பரிய முறையில், மரத்தாலான பத்தக்கட்டை அமைத்து கிராம மக்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் ஓடும் திசையை பத்தக்கட்டை அமைத்து மாற்றி, குழிகள் அல்லது மண்பானைகள் வைத்து மீன்களை பிடிக்கின்றனர். மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய மீன்களைப் பிடிக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை