உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் ஜப்தி

வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் ஜப்தி

மதுரை : மதுரை பழங்காநத்தம் கண்ணன் பெரியசாமி குடும்பத்தினருக்குச் சொந்தமான 92 சென்ட் நிலம் எல்லீஸ் நகரில் இருந்தது. இந்த இடத்தை 1982 ல் சென்ட் ஒன்றுக்கு ரூ.250 விலையில் வழங்கிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நிலத்தை கையகப்படுத்தியது.இத்தொகை போதாது என வாரியத்திற்கு நிலம் அளித்த கண்ணன் பெரியசாமி குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் 1996ல் ரூ.250 என வழங்கியது போதாது. ஒரு சென்டுக்கு ரூ.4 ஆயிரத்து 160 வீதம், வட்டி, ஆறுதல் தொகை, கூடுதல் தொகை என கணக்கிட்டு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து வீட்டுவசதி வாரியம் அவர்களுக்கு அதேநாளில் ரூ.11 லட்சம் வழங்கியது. மீதியுள்ள தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் மீதியுள்ள தொகையை வழங்க வலியுறுத்தி கண்ணன் பெரியசாமி குடும்பத்தினர் மதுரை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.காலம் தாழ்த்தியதால் எல்லீஸ்நகரில் உள்ள வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களின் கார்கள், அலுவலக மேஜை, நாற்காலியை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று நீதிமன்ற ஊழியர்களுடன் வீட்டுவசதி வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அங்குள்ள பொருட்களை ஜப்தி செய்து வெளியே எடுத்து வைத்தனர். இதையடுத்து அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை