சிவகங்கை: முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கையில் அவரது படத்திற்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை எம்.ஜி.ஆர்., சிலையில் நடந்த நினைவு அஞ்சலிக்கு நகர் செயலாளர் என்.எம்.,ராஜா தலைமை வகித்தார். சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள் ஸ்டீபன், செல்வமணி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் வழக்கறிஞர் ராஜா பங்கேற்றனர். காந்திவீதியில் ஜெ., படத்திற்கு ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் (பன்னீர்செல்வம் அணி) நகர் செயலாளர் கே.வி., சேகர் தலைமையில் சண்முகராஜா கலையரங்கம் அருகே அமைக்கப்பட்ட ஜெ., படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சுந்தரபாண்டியன், மருத்துவர் அணி செயலாளர் கிருஷ்ணபிரபு, மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிமுத்து பங்கேற்றனர். தேவகோட்டை: தேவகோட்டை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் கட்சியினர் ஜெ. படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். நகர அ.தி.மு.க., மற்றும் ஜெ. பேரவை சார்பில் தியாகிகள் பூங்கா அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு பூ துாவி வணங்கினர். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், நகர் செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடந்தது. மாவட்ட ஜெ.பேரவை தலைவர் சர்வேயர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், ஜெ. பேரவை இணை செயலாளர் கார்த்திகேயன், ஆறுமுகம் அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட இணை செயலாளர் துரைராஜ், நகராட்சி துணை தலைவர் ரமேஷ், இலக்கிய பிரிவு முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், முருகன் மற்றும் கவுன்சிலர்கள், அனைத்து பிரிவினர் பங்கேற்றனர். அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு சார்பில் ஜெ.படத்திற்கு மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக அண்ணாத்துரை சிலைக்கு வந்தனர். அங்கு ஜெ. படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ.,உமாதேவன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன்,மாநில பாசறை துணை செயலாளர் பார்த்திபன், முன்னாள் மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன், முன்னாள் சிங்கம்புணரி ஒன்றிய குழு தலைவர் திவ்யாபிரபு பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராஜா, வடிவேல், நகரச் செயலாளர் இப்றாம்சா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.