பள்ளி அருகே குப்பை மாணவர்களுக்கு பாதிப்பு
காரைக்குடி: கல்லல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி நுழைவு பகுதி குப்பை கொட்டும் இடமாக காட்சியளிப்பதோடு, குப்பையை எரிப்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.கல்லல் ஊராட்சியில், காரைக்குடி நெடுஞ்சாலையை ஒட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி அருகே குப்பையை கொட்டி தீ வைத்து விடுகின்றனர். குப்பையை எரிப்பதால் வரும் புகையால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.