மேலும் செய்திகள்
நடுரோட்டில் பழுதான அரசு பஸ்: பயணிகள் தவிப்பு
04-Jul-2025
தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து புதுக்குறிச்சிக்கு 8ம் எண் அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த வழித்தடத்தில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர் மாணவியர்களுடன் கிராமத்தினர் 60 க்கு மேல் பயணம் செய்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ தூரம் சென்ற இருந்த போது முன்புற டயர் பஞ்சர் ஆனது. குறைந்த வேகத்தில் சென்றதால் பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டார். பயணிகள் மாணவர்கள் நடுரோட்டில் இறக்கி விடப்பட்டனர். முக்கால் மணி நேரம் ரோட்டிலேயே நின்றனர். அரசு பஸ் கிளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று பஸ் கொண்டு வரப்பட்டது. அதில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
04-Jul-2025