உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உயர்கல்வி வழிகாட்டல்

உயர்கல்வி வழிகாட்டல்

நாச்சியாபுரம்: திருப்புத்துார் மவுண்ட் சீயோன் சில்வர் ஜுபிலி சி.பி.எஸ்.சி.பள்ளியில் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இப்பள்ளியில் படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு செல்லும் வழி குறித்து விளக்கப்பட்டது. தாளாளர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். புதுக்கோட்டைமவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி டீன் ராபின்சன் உயர்கல்விக்கு பள்ளிக்கல்வியில் 12ம் வகுப்பில் குரூப்கள் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும், பல்துறை உயர்கல்விகள் குறித்தும் விளக்கினார். மாணவர்களுக்கு சட்ட நடைமுறைகள் குறித்து வக்கீல் முருகேசன்,தன்னார்வலர் மாரிக்கண்ணு மகளிர் சட்டங்கள் குறித்து விளக்கினர். ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் சிறப்பு விருந்தினர்களை கெளரவித்தார் முதல்வர் சத்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை