காரைக்குடியில் டூவீலர் திருட்டு அதிகரிப்பு
காரைக்குடி: காரைக்குடியில் வீடுகள் மற்றும் கடை முன்பு நிறுத்தி வைக்கப்படும் டூவீலர்களை மர்ம நர்கள் திருடிச் செல்வது அதிகரித்து வருவதால், சி.சி.டி.வி.,கேமராக்கள் இருந்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.காரைக்குடி புதுபஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் முக்கியச் சாலைகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை திருடி செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கடந்த மாதம் பாரதி நகரில் பட்ட பகலில் மர்ம நபர் டூவீலரை திருடி சென்றார். இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.இதுவரை திருடர்களை போலீசார் பிடிக்க வில்லை. புது பஸ் ஸ்டாண்ட் அருகே மோகன் என்பவரது டூவீலரை திருடி சென்றனர். அங்கும் சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தபோது, வாலிபர் ஒருவர் திருடி செல்வதுதெரிந்தது. இதுபோன்று தொடர் திருட்டு அதிகரிப்பால், போலீசார் திணறி வருகின்றனர்.