உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வரத்து கால்வாய் சேதம்

வரத்து கால்வாய் சேதம்

காரைக்குடி, : காரைக்குடி நகராட்சி பனந்தோப்பு பகுதியில் வரத்து கால்வாய் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு ராமசாமி தெருவான பனந்தோப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சந்தைப்பேட்டையை ஒட்டி அமைந்துள்ளதால் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக இச்சாலை உள்ளது. இச்சாலை ஓரங்களில் கழிவு நீர் கால்வாய் முற்றிலும் சிதிலமடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது. கழிவுநீர் செல்ல வழியன்றி தேங்கிக் கிடப்பதோடு சுகாதாரக் கேடு நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர். வரத்து கால்வாயை சரி செய்து கழிவுநீர் முறையாக செல்ல நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை