உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வரைவு வாக்காளர் பட்டியலில்  இடம் பெற்றவர்கள் விசாரணை அறிக்கை அவசியம் கலெக்டர் பொற்கொடி தகவல் 

 வரைவு வாக்காளர் பட்டியலில்  இடம் பெற்றவர்கள் விசாரணை அறிக்கை அவசியம் கலெக்டர் பொற்கொடி தகவல் 

சிவகங்கை: எஸ்.ஐ.ஆர்., மூலம் பெயர் பதிவு பெற்ற வாக்காளர்கள் விசாரணை அறிக்கையினை உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவுக்கு பின் டிச., 19 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில், தகுதி இருந்தும் பெயர் இடம் பெறாதவர்கள் மற்றும் 2026 ஜன., 1 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள் படிவம் 6 மற்றும் உறுதி மொழி படிவத்தை அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலரிடம் அல்லது வாக்காளர் பதிவு அலுவலரிடம், உதவி அலுவலரிடம் ஒப்படைத்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் ஜன., 18 வரை சேர்க்கலாம். வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை திருத்தம் செய்ய படிவம் 8 மூலம் விண்ணப்பிக்கலாம். இது மட்டுமின்றி voters.eci.gov.inஎன்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் டிச., 27 மற்றும் 28 ஆகிய இருநாட்கள் நடைபெற்றன. அடுத்தகட்ட சிறப்பு முகாம் ஜன., 3 மற்றும் 4 ம் தேதிகளில் நடைபெறும். ஓட்டுச்சாவடி ஏஜன்ட்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 10 படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கலாம். 2002ம் ஆண்டு வெளியான எஸ்.ஐ.ஆர்.,ல் தங்களது பெயரோ, உறவினர் பெயரோ இல்லாதது குறித்த விபரங்களை கணக்கெடுப்பு படிவங்களில் சரியாக பூர்த்தி செய்யாமல், பட்டியலில் அளித்து வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், எஸ்.ஐ.ஆர்., அடிப் படையில் தாம் வாக்காளர் என்பதை உறுதி செய்ய விசாரணை அறிவிப்பு அளிக்கப்படும். இந்த நோட்டீசை பெற்ற அனைவரும் தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள 13 ஆவணங்களில் ஒன்றான இருப்பிட சான்று தேவைப்படும் வாக்காளர்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள மண்டல மற்றும் தலைமையிடத்து துணை தாசில்தார்களிடம் கையால் எழுதப்பட்ட சான்றினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை