உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொள்ளையர்களை கைது செய்ய பிப்.5 போராட்டம் நடத்த முடிவு

கொள்ளையர்களை கைது செய்ய பிப்.5 போராட்டம் நடத்த முடிவு

சிவகங்கை : கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி பிப்.5ல் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்அருகே கல்லுவழியில் ஜன.26ம் தேதி அதிகாலை வீட்டில் துாங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபரை இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கி கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். எஸ்.பி., அர்விந்த் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க 6 தனிப்படை அமைத்துள்ளார். போலீசாரும் சுற்றுவட்டார கிராமங்களில் தங்கி வேலை செய்யும் வட மாநிலத்தவரையும், சந்தேகப்படும் படியான நபர்களையும் விசாரித்து வருகின்றனர். காளையார்கோவில் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக கோவில்கள், தேவாலயங்களில் தொடர் கொள்ளை நடந்தது.கடந்த 2020 ஜூலை 13 இரவு கல்லுவழி அருகே உள்ள முடுக்கூரணி ராணுவ வீரர் வீட்டில்இதேபோல் மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அவரது தாய் மற்றும் மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்து தப்பினர். அதேபோல் 2023 ஜன.10 இரவு தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்திலும் வீட்டிற்குள் புகுந்து தாய் மற்றும் மகளை கொலை செய்துவிட்டு பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் கல்லுவழி கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பிப்.5 காலை 10:00 மணிக்கு காளையார்கோவில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் அறிவித்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை