உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லலில் பஸ் ஸ்டாண்ட், சந்தை பா.ஜ.,வினர் மறியலுக்கு முயற்சி

கல்லலில் பஸ் ஸ்டாண்ட், சந்தை பா.ஜ.,வினர் மறியலுக்கு முயற்சி

சிவகங்கை: கல்லலில் நிரந்தர பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தைக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தி மறியலுக்கு முயன்ற பா.ஜ.,வினரை வருவாய்துறையினர் சமரசம் செய்தனர்.கல்லல் ஊராட்சியில் 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.ஊராட்சி ஒன்றிய தலைமையிடமான இங்கு நிரந்தர பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லை. அதே போன்று வியாழன் தோறும் நடக்கும் சந்தைக்கு நிரந்தர இடமின்றி, மெயின் ரோட்டிலேயே நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கண்டித்து கல்லல் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் அறிவித்தனர்.மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஏ.நாகராஜன், மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு நாகேஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் கந்தசாமி, பழனீஸ்வரி, சேது, சிவராமன், சங்கரசுப்பிரமணியன், மகளிர் அணி தலைவர் இந்திரா, வடக்கு மண்டல் தலைவர் பழனியப்பன், காளையார்கோவில் வடக்கு ஒன்றிய தலைவர் பில்லப்பன், திருப்புத்துார் தெற்கு ஒன்றிய தலைவர் தங்கப்பாண்டி, சிவகங்கை நகர் தலைவர் உதயா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கல்லல் அக்ரஹாரம் அருகே மறியலுக்கு முயன்ற பா.ஜ.,வினரிடம் துணை தாசில்தார் நேரு, இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.காரைக்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சமரச கூட்டத்தில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி